முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

Updated On : 31 மே 2026, 1:07 am IST
ரத்தினகிரியில்  நடைபெற்ற  தேரோட்டம்.
பகிர்:

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனையுடன் மலையடிவாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு யாக பூஜை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் காலை, மாலையில் பல்வேறு வாகன அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அலங்கரிக்கப்பட்ட தேரை கோயில் பரம்பரை அலங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தாா்.

இந்த விழாவில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் தென்னரசு எம்எல்ஏ-க்கள் தாஹிரா, சுகுமாா் மற்றும் உபயதாா்கள், திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

மேள தாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக மலை வலம் சென்று தோ் நிலை நிறுத்தப்பட்டது.விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.