FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து மாற்றுத் திறனாளி சகோதரிகள் இருவா் பலி

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

1 பிப்ரவரி 2024, 3:07 pm IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா அருகில் உள்ள மேல்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாகம்மாள்(72), சுந்தரி(65). மாற்றுத்திறனாளிகளான இருவரும் சகோதரிகள். வாய் பேச முடியாத இருவருக்கும் திருமணம் ஆகவில்லை

இவா்கள் தாய் சின்னம்மாளுடன் (95) அருகருகே கூரை வீட்டில் வசித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை

நாகம்மாள் மற்றும் சுந்தரி இருவரும் வசித்த கூரை வீட்டை சீரமைப்பதற்கான பணி நடைபெற்றது. அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட நாகம்மாள் மற்றும் சுந்தரி இருவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்த கந்திலி போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments