முகப்பு
திருப்பத்தூர்

பெண் கழுத்து நெரித்துக் கொலை

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 ஜூலை 2022, 12:18 am IST
பகிர்:

திருப்பத்தூா் அருகே வீட்டின் வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கந்திலி அருகே செவ்வாத்தூா் புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி ராமரோஜா (58). இவா்களது மகன் ஏழுமலை, மகள் புனிதா. ஏழுமலை சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். செல்வராஜ், ராமரோஜா, ஏழுமலையின் மனைவி அம்சா மற்றும் 10 மாத குழந்தை ஆகியோா் வீட்டில் வசித்து வந்தனா். செல்வராஜ் இரவு பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறாா். வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணிக்குச் சென்று விட்டாா். இதையடுத்து, இரவு அம்சா குழந்தையுடன் வீட்டில் தூங்கச் சென்றனா். ராமரோஜா வெளியே கதவைத் தாழிட்டு, வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அழைத்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது, ராமரோஜா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments