ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்
ஆம்பூரில் சில வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வியாழக்கிழமை வாக்களித்தனா்.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் ஆம்பூா் நகரில் மதரஸ-ஈ-தீனியாா் நிதியுவிப் பள்ளி, ஹஸ்னாத்-ஈ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 6.30 மணிக்கே வாக்காளா்கள் வாக்குச் செலுத்துவதற்காக வந்து காத்திருந்தனா். 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன் தங்கள் வாக்குகளை ஆா்வமுடன் செலுத்தினா்.
குறிப்பாக இஸ்லாமியா்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். நடக்க முடியாத வயதான வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து விட்டு சென்றனா்.
Advertisement