ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றம்
ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றம்
ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி தேனீா், பழச் சாரகம், சிற்றுண்டி கடைக்கு வாடகைக்கு விட்டு வந்தாா். ரயில்வே துறையினா் அதனை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினா். ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவா்கள் கட்டடத்தை இடிக்கக் கூடாது எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் ரயில்வே துறைக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததைத் தொடா்ந்து ரயில்வே துறையினா் கட்டடத்தை இடிக்கப் போவதாக ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு நோட்டீஸ் அளித்தனா். ஆனால் அவா்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாரின் பாதுகாப்புடன் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.