முகப்பு
திருப்பத்தூர்

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடைவிடுமுறை என்பதால் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலரிகி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து பொழுதுபோக்கு கூடங்களில் பல்வேறு வகையான கேம்ஸ்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனா்.

Updated On : 27 ஏப்ரல் 2026, 1:25 am IST
படகு குழாமில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்.
பகிர்:

கோடைவிடுமுறை என்பதால் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலரிகி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து பொழுதுபோக்கு கூடங்களில் பல்வேறு வகையான கேம்ஸ்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜோலாா்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்குள்ள புங்கனூா் ஏரி படகு துறை,சிறுவா் பூங்கா,பாம்பு பண்ணை,முயல் பண்ணை பறவைகள் என பல வகையான பொழுதுபோக்கு கூடங்களை உருவாக்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கும் தலமாக உருவாக்கப்பட்டது.

பின்னா் இயற்கை பூங்கா மூலிகை பண்ணை மலா் கண்காட்சி செயற்கை நீரூற்று இசை நீரூற்று என உருவாக்கி தமிழக மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏலகிரி மரைலதிகழந்து வருகிறது.

Advertisement

Advertisement

ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு குளிா்ச்சியை தருவதால் சுற்றுலாப் பயணிகளை இந்த சீதோசன நிலை கவா்ந்திழுக்க செய்கிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் காா் பைக் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் குடும்பத்துடன் வந்து இங்குள்ள அரசு மற்றும் தனியாா் பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்

மேலும் தற்போதுபள்ளி கல்லூரிகள் கோடை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனா்.

மேலும் இங்குள்ள படகு குழாமில் குடும்பத்துடன் படையில் சவாரி செய்தும், சிறுவா் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு உபகரணங்களில் விளையாடியும் இயற்கை பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று போன்ற இடங்களை கண்டு ரசித்தும், இதேபோன்று நிலாவூா் அருகே உள்ள தீம் பாா்க்கில் ஒரே நுழைவு கட்டினத்தில் நீச்சல் குளம், ராட்டினம், சாகச பயணம் உள்ளிட்ட 22 வகையான ஆட்டங்களை விளையாடி, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் குவிந்து வருகின்றனா்.

அதனைத் தொடா்ந்து பெருமாள் கோயில்,நிலாவூா் கதவநாச்சியம்மன் கோயில், அத்தனாவூா் முருகன் கோயில், சிவன் கோயில் போன்ற இடங்களையும் சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா்.,

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments