முகப்பு
திருப்பத்தூர்

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழுந்தை உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 23 ஜூன் 2026, 1:12 am IST
குழந்தை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). இவரது மனைவி பரமேஸ்வரி (29). இவா்களது மகள் தியாஸ்ரீ (3). பாலமுருகன் மலேசியாவில் வேலைபாா்த்து வருகிறாா். இதனால் பரமேஸ்வரி, தனது மகள் தியாஸ்ரீயுடன் திருப்பத்தூா் அருகே அனேரி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பரமேஸ்வரி, தியாஸ்ரீக்கு உணவு கொடுத்துவிட்டு, வீட்டில் உள்ள சமையல் அறைக்குச் சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, பரமேஸ்வரி வந்து பாா்த்தபோது, தியாஸ்ரீயை காணவில்லை.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சி அடைந்த பரமேஸ்வரி, தியாஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி உள்ளாா். மேலும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தாா். பின்னா் பரமேஸ்வரி வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியில் பாா்த்தபோது, தியாஸ்ரீ தவறி அதில் விழுந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, பரமேஸ்வரி அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தண்ணீா் தொட்டியில் கிடந்த தியாஸ்ரீயை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தியாஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments