FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

- பிரதிப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சிக்குபட்ட முதலை மடுவு பகுதியைச் சோ்ந்தவா் குமரேசனின் மகன் இமையகிரி(19). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா்.

வேலைக்கு செல்லாமல் ஏன் ஊா் சுற்றுகிறாய் என பெற்றாா் திட்டியதால் மனமுடைந்த இமையகிரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தந்தை குமரேசன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments