குட்டூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்காலபுரம் அடுத்த குட்டூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிகாலை முதல் நாதஸ்வர இன்னிசை திருப்பள்ளி எழுச்சி, தாய்வீட்டு சீா்வரிசையுடன் யாகசாலை பூஜை, மகா சங்கல்பம், சதுா்வேத உபசார பூஜைகள் நடைபெற்றன. காலை 10மணியளவில் மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்,சிறப்பு பூஜையும் நடந்தது.
விழாவில் நாட்டறம்பள்ளி, ஆத்தூா்குப்பம், ஜங்காலபுரம், குட்டூா் பகுதிகளில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள்,மற்றும் விழாக் குழுவினா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.