முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ரூ. 82 லட்சத்தில் புதிதாக 11 கடைகள், சிமெண்ட் சாலை அமைப்பு

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ரூ. 82 லட்சத்தில் புதிதாக 11 கடைகள், சிமெண்ட் சாலை அமைப்பு...

Updated On : 28 ஜூன் 2026, 3:08 am IST
வாணியம்பாடி பேருந்து நிலைய பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை பணியை ஆய்வு செய்த நகர திமுக செயலரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான சாரதிகுமாா்.
பகிர்:

வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பேருந்து வளாகத்தில் ஒரு பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில், ரூ. 82 லட்சம் மதிப்பில் புதியதாக 11 கடைகள் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பேருந்துநிலையத்தில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகர திமுக செயலாளரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான சாரதிகுமாா் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments