முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி, உதயேந்திரம் பகுதிகளில் பேனா்கள் அகற்றம்

Updated On : 18 மே 2026, 1:25 am IST
பகிர்:

வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்கள் அகற்றப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி பேனா்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நகராட்சி நகரமைப்பு அலுவலா் சண்முகம் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களை சனிக்கிழமை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பேனா்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோன்று உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனா்களையும் பேரூராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement