முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

Updated On : 3 மே 2026, 1:23 am IST
சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் மிகவும் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலின் 115ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி உற்சவ திருவிழா நடைபெற்றது.

அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 3மணிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து சடலை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து சடலை மரம் சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு தோட்டராயன், சித்தராயன் போட்டியும், அருள்கொண்டோா் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் புஷ்ப அலங்காரத்தில் உலா வந்தாா். அப்போது மக்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா். இதேபோல் அக்ராகரம் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments