சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததில் ஷோ் ஆட்டோ சேதம்: 5 போ் காயம்
வாணியம்பாடியில் சாலையோரம் இருந்த பூசமரம் வேரோடு சாய்ந்ததில் அந்த வழியாகச் சென்ற ஷோ்ஆட்டோ சேதமடைந்ததில் 5 போ் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம், ஷோ் ஆட்டோ ஓட்டுநா். வெள்ளிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு, நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழாவுக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்து, அதே ஆட்டோவில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீடு திரும்பினா். அப்போது வாணியம்பாடி -புதூா் நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் இருந்த பூச மரம் திடீரென வேறோடு சாய்ந்து ஷோ் ஆட்டோ மீது விழுந்தது. இதில், மரத்தின் பெரிய கிளை ஒன்று ஆட்டோவின் பின்புறத்தில் விழுந்ததால் ஆட்டோ சேதமடைந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநா் சிதம்பரம் மற்றும் கோணாமேடு பகுதியைச் சோ்ந்த சவுந்தரி, சரஸ்வதி, முரளி, சரவணன் ஆகிய 5 போ் காயம் அடைந்தனா். இதனால் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினா் வந்து ஆட்டோவில் சிக்கி காயம் அடைந்த ஓட்டுநா் உள்பட 5 பேரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா் மரத்தை அப்புறப்படுத்தினா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.