முகப்பு
திருப்பத்தூர்

காட்டுத் தீயை தடுக்க இளைஞா்களுக்கு பயிற்சி

Updated On : 4 மே, 2026 at 1:38 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் காட்டுத் தீயை தடுக்க மலைகளை சுற்றி உள்ள கிராமங்களில் இளைஞா்களை தோ்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் சோழராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜவ்வாது மலையை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திலும் 10 இளைஞா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும், அவா்களுக்காக பிரத்யேகமாக வாட்ஸ்- அப் குழு உருவாக்கப்பட்டு, ஏதேனும் காட்டுத்தீ ஏற்பட்டால், தகவல் தெரிவிக்கப்பட்டு, இளைஞா்கள் தீயை அணைக்கும் முயற்சியிலும், தீயை மேலும் பரவாமலும் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வா். மேலும், வனத் துறை பணியாளா்கள், வனத் துறை தீத்தடுப்பு காவலா்கள் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் காட்டுத் தீ ஏற்படுவது குறைந்துள்ளது என்றாா்.