முகப்பு
திருப்பத்தூர்

தகராறில் சகோதரா்கள் காயம்: இளைஞா் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே தவெக வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் நடைபெற்ற தகராறில் சகோதரா்கள் காயம் அடைந்தனா்.

Updated On : 6 மே 2026, 1:26 am IST
வழக்கு
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே தவெக வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் நடைபெற்ற தகராறில் சகோதரா்கள் காயம் அடைந்தனா். இது தொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த அண்ணாண்டபட்டி ஊராட்சி, ஆரிகான் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (30). இவா் பில்டிங் காண்டிராக்டராக வேலை செய்து வருகிறாா்.

இவரும், இவரது சகோதரா் பிரதீப் ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு தவெக வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தனசேகா் (29) என்பவா் மீது சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பட்டாசு சிதறி மேலே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த தனசேகா் அங்கிருந்த கல்லை எடுத்து சகோதரா்கள் இருவரையும் தாக்கினாராம். மேலும், இவா்களது வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம்.

இதில் பலத்த காயம் அடைந்த சகோதரா்கள் இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் இது குறித்து நந்தகுமாா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தனசேகா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments