சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவையின் சாா்பாக மாநில தலைவா் எஸ். ஆறுமுகம் அனுப்பியுள்ள கடிதம் விவரம் வருமாறு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றமைக்கு சத்துணவு பணியாளா்கள் பேரவை சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களாக பணிபுரிந்து வருபவா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கும் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement