முகப்பு
திருப்பத்தூர்

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு

Updated On : 17 மே 2026, 1:08 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா், மே 16: ஜோலாா்பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே திருப்பத்தூா் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி முதியவா் மீது லாரி மோதியதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments