காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திருத்தணி செய்தியாளர்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திருத்தணி செய்தியாளர்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் வினோத் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர்.