கிணற்றில் பள்ளித் தலைமை ஆசிரியர் சடலம்
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50). இவர், மாதர்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமளா. பன்பாக்கம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்தினருடன் கவரப்பேட்டையில் வசித்து வந்தார்.
முரளி திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லையாம். இந்நிலையில், மாதர்பாக்கத்தை அடுத்த போந்தவாக்கம் அருகே கிணற்றில் இருந்து முரளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பாதிரிவேடு போலீஸார் முரளியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.