FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Updated On : 1 ஜூன் 2026, 11:13 am IST
ஐபிஎல் இறுதிப்போட்டியில்... - பிடிஐ
பகிர்:
Updated On : 31 மே 2026, 11:06 am IST

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க நடைபெற்றதாகக் கூறப்படும் முயற்சிகள் தொடர்பாக வெளிவராத உண்மைகள் பற்றி...

Updated On : 31 மே 2026, 11:08 am IST
Updated On : 31 மே 2026, 11:08 am IST

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

திருவள்ளுவரைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மே 2026, 11:08 am IST

திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!

திருச்சி கிழக்குத் தொகுதி உள்பட திருச்சி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சி செல்கிறார்.

Advertisement

Advertisement

Updated On : 31 மே 2026, 11:15 am IST

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஒருவரை சுட்டுப் பிடித்ததுள்ளனர்.

Updated On : 31 மே 2026, 11:15 am IST

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மே 2026, 11:15 am IST

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தேசிய பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் அவர் தாக்கப்பட்டார் என்றும் அந்த மாநில அமைச்சர் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

Updated On : 31 மே 2026, 11:20 am IST

உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை...

Updated On : 31 மே 2026, 11:33 am IST

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது!

மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 31 மே 2026, 11:38 am IST

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Updated On : 31 மே 2026, 11:58 am IST

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!

புதிய நடைமுறைகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகின்றன.

Updated On : 31 மே 2026, 1:06 pm IST

சென்னை: கோயம்பேட்டில் மதுபான விடுதியில் தகராறு - இலங்கைத் தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை!

மதுபான விடுதியில் இரு தரப்புக்கு இடையே தகராறு - கோபத்தில் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண்!

Updated On : 31 மே 2026, 1:28 pm IST

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!

Updated On : 31 மே 2026, 2:22 pm IST

டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!

Updated On : 31 மே 2026, 2:22 pm IST

விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பேசியுள்ளார்.

Updated On : 31 மே 2026, 3:08 pm IST

கடற்படை தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

Updated On : 31 மே 2026, 3:34 pm IST

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

Updated On : 31 மே 2026, 6:40 pm IST

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல், சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Updated On : 31 மே 2026, 6:40 pm IST

ஆர்சிபி வெற்றிக்காக யாக பூஜை நடத்திய ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் யாக சாலை பூஜை நடத்தினர். மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளிலும் ஈடுபட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் - ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

Updated On : 31 மே 2026, 6:42 pm IST

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இந்த இரண்டு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

Updated On : 31 மே 2026, 7:22 pm IST

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

Updated On : 31 மே 2026, 8:35 pm IST

வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெய்யில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்த நிலையில், இன்று தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை விமான நிலையம், திருச்சி, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் பரமத்திவேலூரில் 103 டிகிரியும், மதுரை, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

Updated On : 31 மே 2026, 8:36 pm IST

ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா பதில்

தவெக அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 31) தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் துரந்தராக செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரேமலதா இவ்வாறு பேசியுள்ளார்.

Updated On : 31 மே 2026, 8:39 pm IST

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 18 ரன்கள் எடுத்தது.

Updated On : 31 மே 2026, 9:17 pm IST

கனவு நனவான தருணம்! டிரம்ப் மகள்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்வையிட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் டிஃபானியின் பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Updated On : 31 மே 2026, 9:32 pm IST

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 155 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகப் பெரிய பலமாக இருந்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சீக்கிரமே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 10 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

Updated On : 31 மே 2026, 10:35 pm IST

வியட்நாம் அதிபரை சந்தித்த கெளதம் அதானி!

இந்திய தொழிலதிபரும் கோடீஸ்வரருமான கெளதம் அதானி வியட்நாம் அதிபர் டோ லாமை மும்பையில் இன்று (மே 31) சந்தித்தார். தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments