பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்துள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 215 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இணை 167 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 100 ரன்களுக்கும் அதிகமாக குவித்த இணை என்ற சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். இந்த இணை 11 முறை 100 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது. அதேபோல, பிளே ஆஃப் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்த சாதனைகள் மட்டுமின்றி மற்றுமொரு சாதனையையும் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இணை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் ஒரே அணியிலிருந்து இரண்டு வீரர்கள் 700 ரன்களைக் கடந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையையும் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இணை படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மன் கில் 722 ரன்களும், சாய் சுதர்சன் 710 ரன்களும் எடுத்துள்ளனர்.
Gujarat Titans openers Shubman Gill and Sai Sudharsan have created history with their partnership.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.