ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷுப்மன் கில்!
ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷுப்மன் கில்லைப் பற்றி...
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி கேப்டன் ஷுப்மன் கில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தான் எதிரான ஒருநாளில் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில், பேட்டிங் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடாத விராட் கோலியை இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் 815 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்தில் தொடர்கிறார். 791 புள்ளிகளுடன் ஷுப்மன் கில் இரண்டாவது இடத்திலும், 2-வது இடத்திலிருந்து 768 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், 754 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா 4-வது இடத்திலும், ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 712 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் சக வீரர் இஷான் கிஷண் அதிரடியாக 21 இடங்கள் முன்னேறி, 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த கில், ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் பேட்டிங் தரவரிசை இரண்டிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
India ODI captain Shubman Gill has climbed to the second spot in the ODI batting rankings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.