FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒரு புள்ளியில் முதலிடத்தை இழந்த ஷுப்மன் கில்..! டாப் 5ல் 3 இந்திய வீரர்கள்!

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல் குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 4:39 pm IST
ஆட்டமிழந்து வெளியேறும் ஷுப்மன் கில். - படம்: ஏபி
பகிர்:

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்தார்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் முதலிடத்தில் இருக்கிறார். சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என நியூசிலாந்து வென்றது.

இந்தத் தொடரில் டேரில் மிட்செல் முதல் போட்டியில் 65 ரன்கள் குவித்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் தலா 28 ரன்களை எடுத்தார். பின்னர், கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

இங்கிலாந்துக்குக்கு எதிரான் தொடரில் இந்தியா 1-2 என தோல்வியுற்றது. இருந்தாலும் இந்தத் தொடரில் ஷுப்மன் கில் 188 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டேரில் மிட்செலைவிட ஒரு புள்ளி குறைவாக இருக்கிறார்.

இந்தியாவின் வீரர்கள் கோலி, ரோஹித் அடுத்தடுத்த வரிசையில் டாப்5 இடத்துக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜோர் ரூட் 249 ரன்கள் குவித்து அசத்தினார். அதானல், தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறினார்.

ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை

1. டேரில் மிட்செல் - 802 புள்ளிகள் (நியூசிலாந்து)

2. ஷுப்மன் கில் - 801 புள்ளிகள் (இந்தியா)

3. விராட் கோலி - 767 புள்ளிகள் (இந்தியா)

4. ரோஹித் சர்மா - 758 புள்ளிகள் (இந்தியா)

5. இப்ரஹிம் ஸத்ரான் - 712 புள்ளிகள் (ஆப்கானிஸ்தான்)

summary

Shubman Gill one point shy of world No.1 in latest ICC ODI batting rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments