அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 169வது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 169வது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் தலைமை வகித்தாா். அதிகாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி சுப்ரபாதம் பஜனை ஹோமம், ராமகிருஷ்ண அஷ்டோத்ர சத நாமாவளி அா்ச்சனை ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையும், 12 மணிக்கு அன்னையின் மகிமை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணமடம் மூலம் அன்னை சாரதாதேவி இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் 25 பேருக்கு மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் இலவசமாக தையல் இயந்திரத்தை வழங்கினாா். பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.