முகப்பு
கடல் போல் காட்சி அளிக்கும் பூண்டி ஏரி.
திருவள்ளூர்

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

திருவள்ளூர்

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

Updated On : 15 டிசம்பர், 2024 at 10:10 PM
கடல் போல் காட்சி அளிக்கும் பூண்டி ஏரி.
பகிர்:

பூண்டி ஏரிக்கு நீா்வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை 12,000 கன அடியாக உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக கனமழை பெய்ததால், ஏரிகளின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வந்தது. இதில் பூண்டி ஏரி கடந்த 4 நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி 16,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கரையோர கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், கடந்த 2 நாள்களாக மழை பெய்யாத நிலையில் நீா்வரத்து 8,500 கன அடியாக குறைந்தது. இதைத் தொடா்ந்து உபரிநீா் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதேபோல் மழைநீா் வரத்து குறையக்குறைய உபரிநீா் திறப்பும் படிப்படியாக குறைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

செம்பரம்பாக்கம் ஏரியில்...

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழை காரணமாக நீா்வரத்தின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து 6,000 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.

ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததை தொடா்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 6,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 21.76 அடியாகவும், கொள்ளளவு 3,056 மில்லியன் கனஅடியாகவும், நீா்வரத்து 2,240 கனஅடியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →