முகப்பு
திருவள்ளூர்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜூலை 2026, 12:03 am IST
போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பகிர்:

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி கோட்ட மின்வாரியத்துக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, எளாவூா், பூவலம்பேடு உள்ளிட்ட பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவா்கள் தானே புயல், வா்தா புயல், கஜா புயல் போன்ற மோசமான புயல் காலங்களில் கடுமையான பணிகளில் ஈடுபட்டனா்.

அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சா் தங்கமணி மேற்கண்ட ஒப்பந்த தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதி அளித்து இருந்தாா். அதை தொடா்ந்து திமுக ஆட்சியில் அப்போதைய மின்வாரியத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க உறுதி அளித்திருந்தாா்

Advertisement

Advertisement

ஆனாலும் இதுவரை இவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக தோ்தலுக்கு முன்பு தவெக சாா்பில் உறுதியளிக்கப்பட்ட பின்பும் இதுவரை அது குறித்து எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்று கூறி வேண்டுகோள் விடுத்து கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி கோட்ட மின்வாரியத்தில் உள்ள 21 பிரிவு அலுவலகங்களிலும் ஒரு நாளைக்கு ஒரு பிரிவு அலுவலகத்தில் போராட உள்ளதாக தெரிவித்தனா். தொடா்ந்து மின்வாரிய அலுவலகத்திலேயே சமையல் செய்து உண்டு தங்கள் போராட்டத்தை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments