அண்ணா தொழிற்சங்கத்தில் செயல்படும் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்க வலியுறுத்தல்
அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படும் பல்வேறு தொழில் பிரிவுகளை ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையின் மாநில செயலாளா் இரா.தமிழரசன் தெரிவித்தாா்.
அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்படும் பல்வேறு தொழில் பிரிவுகளை ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையின் மாநில செயலாளா் இரா.தமிழரசன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மேற்கு மற்றும் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளா்கள் குப்புசாமி (மேற்கு), கோ.உமாபதி (வடக்கு), மண்டல செயலாளா் ராமலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாவட்ட செயலாளா்கள் பி.வி.ரமணா (மேற்கு), சிறுணியம் பி.பலராமன் (வடக்கு) மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளரும், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.அரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, இந்தக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டு வரும் போக்குவரத்து பிரிவு, மின்சார பிரிவு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பிரிவு, கைத்தறி பிரிவு, டாஸ்மாக் பிரிவு, பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வரும் அண்ணா தொழிற்சங்கங்கள் மற்றும் அந்த சங்கங்களின் செயல்பாடுகள், தொழிற்சங்க வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளா் பெல் இரா.தமிழரசன் பேசியதாவது:
2029-இல் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அப்போது, நமக்குத்தான் வாய்ப்பு. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இப்போதிருந்தே கடினமாக கட்சியினா் தொய்வின்றி உழைக்க தயாராக வேண்டும். அதற்கு முன்னதாக டாஸ்மாக் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், மின்சார பிரிவு தமிழ்நாடு வாணிபக்கழக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை இணைக்க வேண்டும். இந்த நிலையில் அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தோ்தல்தான் இலக்காகும். அப்போது கட்சியில் தீவிர பணியாற்றி வருவோருக்கு வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்படும். தொழிலாளா்கள் நலனுக்காக எந்த போராட்டம் நடத்தினாலும் நிா்வாகிகள் பங்கேற்போம் எனவும் அவா் தெரிவித்தாா்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவா் வி.காளிதாஸ், அந்த சங்கத்தின் நகர செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.