விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் எச்சரிக்கை
விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் எச்சரித்தாா்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சா் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தவும், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே குவாரி பணி செய்ய வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினரால் அளவீடு செய்யப்பட்டதில், குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அரசு அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்துச்செல்லப்பட்ட 8 குவாரிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து, குவாரி உரிமையாளா்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அனுமதி வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் கனிமங்கள் வெட்டியெடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.