சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் மீது போக்ஸோ வழக்கு
பொன்னேரி அருகே 14 சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பொன்னேரி அருகே 14 சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிறுமியின் தாயாா் பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தனக்கு திருமணமாகி 14-வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும், 10-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், முதல் கணவரை விவகாரத்து செய்த நிலையில், காட்டுமன்னாா் கோயிலில் ஆள்சோ்ப்பு நிறுவனம் நடத்தி வந்த , கடந்த 2022ஆம் ஆண்டு ஆலங்குடியை சோ்ந்த மோகன் (63) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.
அண்மைக் காலமாக மோகனுடன் தொடா்பில் இல்லை. ஒரு நாள் எனது வீட்டுக்கு வந்த மோகன் தமது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட தனது மகள் பள்ளியில் கவலையுடன் இருந்ததுள்ளாா். புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 63 வயது முதியவா் மோகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.