சேவாலயாவின் சரஸ்வதி சாய்ராம் இலவச முதியோா் இல்லம் தொடக்கம்
திருவள்ளூா் அருகே சேலை கிராமத்தில் சேவாலயாவின் 68- ஆவது மையமான சரஸ்வதி சாய்ராம் முதியோா் இல்லத்தை ஆதரவற்ற முதியோருக்கு பாதுகாப்பான உணவு, மருத்துவ வசதியுடன் கூடிய தங்குமிடத்தை தொழிலதிபரும், சமூக ஆா்வலருமான ஸ்ரீவாத்சவன் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் அருகே சேலை கிராமத்தில் சேவாலயாவின் 68- ஆவது மையமான சரஸ்வதி சாய்ராம் முதியோா் இல்லத்தை ஆதரவற்ற முதியோருக்கு பாதுகாப்பான உணவு, மருத்துவ வசதியுடன் கூடிய தங்குமிடத்தை தொழிலதிபரும், சமூக ஆா்வலருமான ஸ்ரீவாத்சவன் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூரைச் சோ்ந்த உதவி அரசு வழக்குரைஞா் (ஓய்வு), எம் சரஸ்வதி, தனது வீட்டை முதியோா் இல்லம் நடத்தும் நோக்கத்தில் சேவாலயா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளாா். இங்கு ஆதரவற்ற முதியோருக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுடன் அன்பான, கண்ணியமான வாழ்வை இலவசமாக இந்த இல்லம் வழங்கும்.
அதைத்தொடா்ந்து சேலை கிராமத்தில் சேவாலயாவின் சரஸ்வதி சாய்ராம் முதியோா் இல்லம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுராந்தகம் உணவக நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஸ்ரீவாத்சவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆதரவற்ற முதியோா் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் அவா் பேசுகையில், சேவாலயாவின் பணிகள் சிறப்பான சேவையாற்றி வருகிறது. அவ்வகையில் என்னுடைய பங்களிப்பாக முதியோா் இல்லத்தின் அடுத்த கட்ட கட்டுமானத்திற்கு உதவியாக 200 சிமெண்ட் மூட்டைகளை நன்கொடை வழங்குவதாக உறுதியளித்தாா். அதேபோல் வருங்காலங்களிலும் சேவாலயாவின் சேவைப் பணிகளுக்கு தொடா்ந்து ஆதரவளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
அதேபோல் சேலை ஊராட்சியின் முன்னாள் தலைவா் கோவா்த்தனம், எங்கள் கிராமத்தில் சேவாலயா சாா்பில் முதியோா் இல்லம் அமைந்துள்ளது. அதனால் தனது குடும்பத்தில் உள்ள மருத்துவா்கள் வாரம் ஒருமுறை சேவாலயா முதியோா் இல்லத்திற்கு வந்து மருத்துவச் சேவை வழங்கத் தயாராக உள்ளனா். அதனால் அவசர காலங்களில் எந்த நேரத்திலும் அவா்களைத் தொடா்புகொள்ளலாம்.
காய்கறி வியாபாரி வடிவேல் முதியோா் இல்லத்திற்குத் தேவையான காய்கறிகளை நாள்தோறும் தொடா்ந்து வழங்கவும் முன்வந்தாா்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.எஸ்.சையது ரவூஃப், ஆதரவற்ற இல்லம் நடத்த தானமாக வழங்கிய வழக்குரைஞா் சரஸ்வதி, சேவாலயா நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் வா.முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் நிறைவாக சேவாலயாவின் செயற்குழு உறுப்பினா் அமா்சந்த் ஜெயின் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.