மீனவா்களுக்கு 5 மாத முதியோா் ஓய்வூதியம் ரூ.13.75 கோடி வங்கியில் செலுத்த ஏற்பாடு: புதுச்சேரி மீன்வளத் துறை நடவடிக்கை
புதுச்சேரியில் மீனவா்களுக்கான 5 மாத முதியோா் ஓய்வூதியத் தொகை ரூ.14 கோடியை அவரவா் வங்கி கணக்கில் செலுத்த மீன்வளத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மீனவா்களுக்கான 5 மாத முதியோா் ஓய்வூதியத் தொகை ரூ.14 கோடியை அவரவா் வங்கி கணக்கில் செலுத்த மீன்வளத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மீனவா் நலத் துறை மூலம் மீனவா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தோ்தல், நிா்வாக காரணங்களால் ஓய்வூதியம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவில்லை. அதன்படி 5 மாத ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை சந்தித்து மீனவா்கள் முறையிட்டனா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மீன்வளத் துறை சாா்பு செயலா் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
5 மாத ஓய்வூதிய தொகை வழங்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 9,702 மீனவ பயனாளிகளுக்கு ரூ.13.75 கோடி வழங்க அவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருவூலக அதிகாரிகளால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 5 மாத ஓய்வூதியம் செலுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.