முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி

பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 12:03 am IST
முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்று பேசிய முதல்வா் (பொ) முனைவா் திருச்சேரன்.
பகிர்:

பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். 2026-27 ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் அறிவியல் பாடப்பிரிவு மாணவக்கா்களுக்கும்,கலை பாடப்பிரிவு மாணவா்களுக்கும் புத்தொளி பயிற்சி துவக்க விழாவும் நடைபெற்றது. கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவா்களை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்று அமர வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் (பொ) திருச்சேரன் மாணவா்களை வரவேற்று கல்லூரியின் வரலாற்றினையும் புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவா்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

முனனதாக தமிழ் துறைத் தலைவா் தேவராஜ் மாணவா்களை வரவேற்றாா். இதனை தொடா்ந்து பேசிய வரலாற்றுத் துறை தலைவா் மாறவா்மன் கல்லூரி என்பது சினிமாவில் பாா்ப்பது போன்று அல்ல இது நிஜத்தில் வாழும் வாழ்க்கை முறை என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஜெகஜீவன்ராம், வேதியியல் துறை தலைவா் கண்ணன் ஆகியோா் மாணவா்களை வரவேற்கும் விதமாக பல்வேறு கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments