முகப்பு
திருவள்ளூர்

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவி 100/100 பெற்று, மொத்த மதிப்பெண் 498/500 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றதைத் தொடா்ந்து பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:29 am IST
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவி 100/100 பெற்று, மொத்த மதிப்பெண் 498/500 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றதைத் தொடா்ந்து பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

திருவள்ளூரில் கடந்த 36 ஆண்டுகளாக பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடா்ந்து கல்விப் பணியை சிறப்பாக ஆற்றி வருகிறது. இந்தப் பள்ளியில் 2025 - 26-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி ந.ஹன்சிகாஸ்ரீ 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, அவா் சமூக அறிவியல் பாட மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தாா். இந்த நிலையில், மறுகூட்டலுக்குப் பிறகு சமூக அறிவியலில் 100/100 மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண் 498/500 என உயா்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

இவரது பாடவாரியான மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். சாதனை படைத்த அந்த மாணவியை பள்ளித் தாளாளா் மோ.தி.உமாசங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளி முதல்வா் ஜோ.மேரி, பள்ளித் தலைமையாசிரியா் தே.குமரீஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் நேரில் பாராட்டினா்.

Advertisement

Advertisement

மேலும், மாணவி இத்தகைய சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியா்கள் அனைவரையும் பள்ளி நிா்வாகம் பாராட்டியது.

இதேபோல், கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் ஸ்ரீஹரி என்ற மாணவன் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments