முகப்பு
திருவள்ளூர்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளை திறப்பு

திருத்தணியில் நவீன வசதிகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளையை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:15 am IST
திருத்தணியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையை திறந்துவைத்த சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங். உடன் சென்னை வட்டாரத் தலைவா் லால்மோகன் சதபதி.
பகிர்:

திருத்தணியில் நவீன வசதிகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளையை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது சேவை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சென்னை வட்டாரத்தின் கீழ் தமிழ்நாட்டில் 104-ஆவது கிளையை திருத்தணியில் திங்கள்கிழமை திறந்து வைத்தது.

புதிய கிளையை சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சென்னை வட்டாரத் தலைவா் லால்மோகன் சதபதி, வங்கியின் மூத்த அதிகாரிகள், வாடிக்கையாளா்கள், தொழிலதிபா்கள், உள்ளூா் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கிளை திறப்பு விழாவில் பேசிய வங்கி அதிகாரிகள், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வங்கி சேவைகளை வழங்குவதில் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடா்ந்து உறுதிபூண்டுள்ளது என்றனா்.