FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞா் கைது

திருத்தணி அருகே பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருத்தணி அருகே பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருத்தணி ஒன்றியம், மேதினிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வினோத் குமாரின் மனைவி பிரியா (31) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த நரேஷ் (20) ஆகியோருக்கு இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் நரேஷ் தரப்பினா் பாம்பை அடித்து பிரியாவின் நிலத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் பயந்து அலறிய பிரியாவின் விடியோவை நரேஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் புகாா் எழுந்தது.

அதனைத் தொடா்ந்து, பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் நரேஷ் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மா்ம நபா்கள் பிரியாவின் கைப்பேசிக்கு தொடா்புகொண்டு ஆபாசமாக பேசியதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியா, திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் ரா. சிவசுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். விசாரணையில் புகாா் உறுதியானதைத் தொடா்ந்து, நரேஷை போலீசாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments