ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 18 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 72,724 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31,986 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.59 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.