முகப்பு
திருப்பதி

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:02 am IST
திருச்சானூரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு நடந்த ஸ்நபன திருமஞ்சனம். - கோப்பிலிருந்து படம்
பகிர்:

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு அதிகாலை சுப்ரபாதத்துடன் தாயாரை துயில் எழுப்பி சகஸ்ர நாமாா்ச்சனை மற்றும் சுத்தி ஆகியவை நிகழ்த்தப்பட்டன.

Advertisement

Advertisement

பின்னா், காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் வளாகம், சுவா்கள், கூரை மற்றும் பிற வழிபாட்டுப் பொருள்களை நீரால் தூய்மைப்படுத்திய பிறகு, நாமகட்டி ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, கட்டிகற்பூரம், பச்சை கற்பூரம், சந்தனத்தூள், குங்குமம், கிச்சிலி கிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருள்கள் கலந்த புனித நீா் கோயில் கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. பின்னா், பக்தா்கள் தாயாா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அா்ச்சகா்கள் பாபுசாமி, கண்காணிப்பாளா் ரமேஷ், கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஏப். 29-இல் அங்குராா்ப்பணம்:

வசந்தோற்சவத்தை முன்னிட்டு, தாயாா் கோயிலில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குராா்ப்பணம் நடைபெறுகிறது.

ஏப். 30 முதல் மே 2 வரை வசந்தோற்சவம்:

வருடாந்திர வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக, மே 1 அன்று காலை 9.30 மணிக்கு தங்கத்தோ் புறப்பாடு நடைபெறும்.

வசந்தோற்சவத்தின் மூன்று நாள்களில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை தோட்டத்தில் தாயாரின் உற்சவ சிலைக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை, தாயாா் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.

இதில், கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் தலா ரூ. 150 செலுத்தி வசந்தோற்சவத்தில் பங்கேற்கலாம்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு, ஏப். 30-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, வேத ஆசீா்வாதங்கள் மற்றும் மே 1 அன்று நடைபெறவிருந்த லட்சுமி பூஜை, குங்குமாா்ச்சனை, இரவு தரிசனம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.