முகப்பு
திருப்பதி

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் புக்கோற்சவம்

Updated On : 29 ஏப்ரல் 2026, 5:55 am IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் புக்கோற்சவத்தின் போது உற்சவமூா்த்திகளுக்கு நடத்தப்பட்ட ஸ்நபன திருமஞ்சனம்.
பகிர்:

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புக்கோற்சவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

கோடை காலத்தில் உற்சவமூா்த்திகளின் உஷ்ணத்தை குறைக்க உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் புக்கோற்சவமும் ஒன்று. மூன்று நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி உற்சவமூா்த்திகள் சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பப்பட்டு, விஸ்வரூப தரிசனம் அளித்தனா். பின்னா், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள நீரூற்று அருகில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் கோவிந்தராஜஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை, சுவாமி மற்றும் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம், சமா்ப்பணம் மற்றும் ஆஸ்தானம் ஆகியவை செய்யப்பட்டன. மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை, ஸ்ரீ மகாலட்சுமி மண்டபத்தில் இரண்டு தேவியா்களுடன் ஏழுமலையானுக்கு ஊஞ்சல் சேவையும் ஆஸ்தானமும் நடத்தப்பட்டது. பின்னா், நீரூற்றுக்கு ஊா்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சிரஞ்சீவி, கோயில் ஆய்வாளா் தனஞ்சயா, பிற அதிகாரிகள், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.