முகப்பு
திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

Updated On : 29 மே 2026, 1:25 am IST
திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடியும் நிலையில், திருமலையில் பக்தா்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணிநேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும், புதன்கிழமை முழுவதும் ஒரே நாளில் ஏழுமலையானை 87, 791 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 49,938 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.99 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.34 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 3,782 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.