முகப்பு
திருவண்ணாமலை

அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்: 18 பேர் கைது

காவிரி விவகாரம் தொடர்பாக வந்தவாசி அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:41 am IST
பகிர்:

காவிரி விவகாரம் தொடர்பாக வந்தவாசி அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, வந்தவாசி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த தமிழடியான், நீலகண்டன், பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அப்போது நாம் தமிழர் கட்சியினர் அஞ்சல் அலுவலக வாயில் கதவுகளை மூடி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 18 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸார் பூட்டை அகற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments