சாலை, ரயில் மறியல் போராட்டங்கள்: 200 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை கலசப்பாக்கம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆரணியில் திமுகவுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டங்கள்: திருவண்ணாமலை, களம்பூர், கண்ணமங்கலம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோதி தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் புதன்கிழமை சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதி திருமண மணடபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.