முகப்பு
திருவண்ணாமலை

தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

திருவண்ணாமலையை அடுத்த தல்லாகுளம் கிராமத்தில் உள்ள போப் தொண்டு நிறுவனத்தில் 32-ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ்  விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:51 am IST
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த தல்லாகுளம் கிராமத்தில் உள்ள போப் தொண்டு நிறுவனத்தில் 32-ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ்  விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அந்த நிறுவனர் தலைவரும், வழக்குரைஞருமான ரொசாரியோ தலைமை வகித்தார். தொண்டு நிறுவனத் திட்ட மேலாளர் ஜெஸ்டின்குமார் வரவேற்றார். தொண்டு நிறுவன முன்னாள் தலைவர்  லூர்துசாமி, கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டினார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெய் செளந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஏழை-எளியோருக்கு இலவச வேட்டி-சேலைகள் உள்பட 300 பேருக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினார்.
விழாவில், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், நடனம், தப்பாட்டம், சாட்டைக்குச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விழாவில் போப் தொண்டு நிறுவன ஊழியர்கள், வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments