முகப்பு
திருவண்ணாமலை

வருவாய் அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

போளூரில் தமிழ்நாடு குரூப் 2 நேரடி நியமன வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 9:56 am IST
பகிர்:

போளூரில் தமிழ்நாடு குரூப் 2 நேரடி நியமன வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் மஞ்சுளா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட துணை ஆட்சியருமான கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், 2018-ஆம் ஆண்டுக்கான தற்காலிக துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். வருவாய் ஆய்வாளர் பயிற்சி முடித்துள்ள நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு பராமரிப்பு தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு வருவாய் ஒன்றிய மாவட்டத் தலைவர் செல்லபாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments