யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நாம சங்கீர்த்தனம், நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நாம சங்கீர்த்தனம், நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றன.
திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீபகவான் யோகிராம் சுரத்குமார் சந்நிதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாகவதர்கள் விஜய கிருஷ்ணன், பாலாஜி ஆகியோர் பங்கேற்ற நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும், மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் எம்.பி.பாலசந்திரன், எம்.பி.பாலமுருகன் குழுவினரின் நாகஸ்வர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன்,
மா தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.