ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரி
பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை தெய்வீகப் பாடல்கள் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.
பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை தெய்வீகப் பாடல்கள் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, 2018 டிசம்பர் வரை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீயோகிராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சியாளர் அனுஷா பாலாஜி தலைமையில், ஸ்ரீஅமர பாரதி மாணவிகள் பங்கேற்று ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் தெய்வீகப் பாடல்களைப் பாடினர். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை மதுரை பத்மபூஷன் டி.என்.சேஷகோபாலன் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரம தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.