முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கணிதத் துறை சார்பில், தேசிய அளவிலான 

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:42 am IST
பகிர்:

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கணிதத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி வரவேற்றார்.
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.வி.அருணாச்சலம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கணிதத் துறைத் தலைவர் 
ஜி.தங்கராஜ், பேராசிரியர் எம்.சித்ரா, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவுத் தலைவர் எஸ்.ஸ்ரீநாத், புதுவை மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஆர்.கண்ணன், வேலூர் டி.கே.எம். கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.மணிமேகலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி கணிதத் துறை தலைவர் ஈ.கலைவாணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.