துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம்
காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருவண்ணாமலை காந்தி சிலை பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு புலவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமயநெறி ஆசிரியர் சீனிவாச வரதன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். தொடர்ந்து, அதன் நிர்வாகிகள் கருப்புப் பட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதியாக, வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் வாசுதேவன், அம்பி, மாணிக்கம், வைத்தியலிங்கம், சண்முகம், சேதுமாதவன், அசோக்குமார், மகாதேவன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.