பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்
ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்தது குறித்து...
ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் முழுமையாக நிறுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல்கள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இதனால், உலகின் பல நாடுகளில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் இயங்காததால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
பேச்சுவார்த்தையில் நாங்கள் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறோம். நல்ல ஒப்பந்தத்துக்கு மிக அருகில் இருக்கிறோம். அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்தால் நல்லது. இல்லையெனில், நாம் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.
ஈரானின் இராணுவத்தைத் தோற்கடித்துவிட்டோம். நான் ஒரு நல்ல முடிவைப் பெறுவதையே விரும்புகிறேன். ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே நம்மால் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க முடியும். அணு ஆயுதங்கள் இருக்காது என்பதுதான் என்னிடம் உள்ள ஒரே உத்தரவாதம். அதற்கு ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளது.
நாங்கள் விரும்புவதை மெதுவாகப் பெற்று வருகிறோம். எனக்கு எந்த அவசரமும் இல்லை. அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.
US President Donald Trump has stated that if negotiations with Iran fail, it may be necessary to resume the war.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.