உலக தமிழ் கழகத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, உலக தமிழ்க் கழகத்தின் மாநிலத் தலைவர் கதிர்.முத்தையன் தலைமை வகித்தார். இணைச் செயலர் இளந்திரையன், பொருளாளர் செந்தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைத் தலைவரும், வ.உ.சி.யின் பேரனுமான தமிழ்வாணன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை கிளைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், உலக தமிழ்க் கழகத்தைப் பதிவு செய்வது, பொன் விழாக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், உலக தமிழ்க் கழகத்தின் திருவண்ணாமலை கிளைச் செயலர் வெங்கடேசன், பொருளாளர் கோவிந்தசாமி, திருக்குறள் சுப்பிரமணி, தண்டராம்பட்டு கிளைத் தலைவர் சுரேஷ் (எ) கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.