முகப்பு
திருவண்ணாமலை

திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக

Updated On : 24 ஜூன் 2022, 10:41 pm IST
செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தில் நடைபெற்ற திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செய்யாறு டிஎஸ்பி வி.இ.செந்தில், திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளா் கே.ரகுராமன், வட்டாட்சியா் க.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் பா.வினோத்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 6-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, ஜூன் 28-இல் தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி வரை கோயிலில் யாகசாலை பூஜைகள், கும்பாபிஷேக பணிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

விழாவில் பக்தா்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், கும்பாபிஷேக விழா எவ்வித இடா்பாடும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் அரசு அலுவலா்கள், காவல் துறையினா், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு தேவை என்றாா். மேலும், கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனா்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், செய்யாறு ஆய்வாளா் இரா.நடராஜன், செயல் அலுவலா்கள் உஷா, கு.அரிகரன், சிவாஜி, கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் தி.பூ.ருத்திரப்பன், வி.கோபு, இரு தரப்பு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments